வெளிநாட்டில் அஜித்தை தேடிப்பிடித்து அடுத்த பட அப்டேட் கேட்ட ரசிகர்... ஏகே-வின் ரியாக்ஷன் என்ன தெரியுமா?
ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கவ் நகரில் அஜித் தங்கி இருப்பது தெரிந்ததும், அவரை நேரில் சென்று சந்தித்து ரசிகர் ஒருவர் அப்டேட் கேட்டுள்ளார்.

துணிவு படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் அஜித் தற்போது வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அதன்படி லண்டன், போர்ச்சுகல் போன்ற நாடுகளுக்கு சென்ற அஜித், தற்போது ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அங்கு அவர் ரசிகர்களுடன் எடுத்த புகைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது அஜித்தை சந்தித்த ருசீகர தகவலை ரசிகர் ஒருவர் டுவிட்டரில் நெகிழ்ச்சி உடன் பகிர்ந்துள்ளார்.
ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கவ் நகரில் அஜித் தங்கி இருப்பது தெரிந்ததும், அப்பகுதியின் அருகே தங்கியிருக்கும் தஞ்சாவூரை சேர்ந்த ரசிகர் ஒருவர் தன்னுடைய நண்பர்களை அழைத்துக்கொண்டு அஜித்தை சந்திக்க ஒரு கிலோமீட்டர் ஓடி சென்றாராம். பின்னர் அங்கு 15 நிமிட தேடலுக்கு பின்னர் அஜித் அங்குள்ள காபி கடை ஒன்றில் அமர்ந்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... லியோ பட ரூட்டை பாலோ பண்ணும் அஜித்... மகிழ் திருமேனிக்கு பறந்த அதிரடி உத்தரவு - இதெல்லாம் ஒர்க் அவுட் ஆகுமா?
பின்னர் அருகில் செல்ல தயக்கத்துடன் நின்றுகொண்டிருந்த அவர்களை பார்த்ததும் அஜித் உடனடியாக அழைத்து பேசினாராம். இதையடுத்து அவர்களிடம் நலம் விசாரித்த அஜித், பின்னர் அவர்களிடம் போட்டோவும் எடுத்துக்கொண்டாராம். கடைசியாக 5 நிமிட உரையாடலுக்கு பின் அஜித்திடம் அப்டேட் எதாவது இருக்கா தல என அந்த ரசிகர் கேட்டுள்ளார்.
இதற்கு இப்போ என பிரேக் வேணும்பா என சொல்லிவிட்டாராம் அஜித். பெரிய செலிபிரிட்டினு பந்தா பண்ணாம செம்ம ஜாலியாக அஜித் தங்களுடன் உரையாடியதாக அந்த ரசிகர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அஜித் தற்போது பிரேக் வேணும் என சொல்லியதைப் பார்த்தால் தற்போதைக்கு ஏகே 62 அப்டேட் வெளியாக வாய்ப்பில்லை போல தெரிகிறது.
இதையும் படியுங்கள்... ஏகே 62 படத்தின் இசையமைப்பாளர் இவரா? பக்கா பிளான் போட்டு மகிழ் திருமேனி தேர்வு செய்தது யாரை தெரியுமா!