பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ஏவிக்ஷன் தினமான இன்று ரசிகர்கள் அனைவரும் இன்று வெளியேறப்போவது யார் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர். மதுமிதாவை தவிர மொத்தம் 6 பேர் இந்த லிஸ்டில் உள்ளதால், ரசிகர்களாலும் யார் வெளியேறுவார் என்பதை கணிக்க முடியவில்லை. 

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புதிய ப்ரோமோவில், ரசிகை ஒருவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் கவினிடம் பேசுகிறார். அப்போது தற்போது பிக்பாஸ் வீட்டில் உள்ள யாரை உண்மையில் நீங்கள் காதலிக்கிறீர்கள் என கேட்கிறார்.

எதிர்பாராத இந்த கேள்வியால் கவின் அதிர்ச்சி அடைந்தாலும் , பின் என் வீட்டில் உள்ள அத்தை பெண்களிடம் எப்படி விளையாடுவேனோ அதே போல் தான், அபி, சாக்ஷி, ஷெரின் போன்ற போட்டியாளர்களிடம் விளையாடுவதாக தெரிவித்தார். 

உடனே போன் செய்த ரசிகரின் பெயரான கிருத்திகா என்கிற பெயரை கூறி, இந்த பெயரில் உங்களுக்கு யாராவது அத்தை பெண் இருக்கிறாரா என சந்துல பூந்து கவினை கலாய்த்து விட்டார் கமல்.