நடிகை அதுல்யாவிற்கு (athulya) ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதில் ஒரு தீவிர ரசிகர் செய்த செயல் தான் தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.
‘காதல் கண்கட்டுதே’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதுல்யா (athulya). முதல் படத்திலேயே அவருக்கு ரசிகர்கள் கூட்டம் உருவானது. இதையடுத்து ‘நாடோடிகள் 2’, ‘ஏமாளி’, ‘அடுத்த சாட்டை’ போன்ற படங்களில் அதுல்யாவின் நடிப்பு தனியாக தெரியவே ரசிகர்களின் நெஞ்சைக் கவர ஆரம்பித்தார்.
ஆரம்பத்தில் ஹோம்லி லுக்கில் நடித்து வந்த அதுல்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான கேப்மாரி, சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் ஆகிய படங்களில் கிளாமரான வேடங்களில் நடித்து இளசுகளை வெகுவாக கவர்ந்தார். அதையடுத்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார்.
"
அதுல்யாவிற்கு (athulya) ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதில் ஒரு தீவிர ரசிகர் செய்த செயல் தான் தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.
அதன்படி இணையத்தில் வைரலாக பரவும் வீடியோவில், நடிகை அதுல்யா நடித்துள்ள முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் போஸ்டரை குறுகுறுவென பார்க்கும் நபர் ஒருவர், திடீரென அந்த போஸ்டரில் உள்ள அதுல்யாவின் போட்டோவுக்கு நச் என முத்தம் கொடுத்துவிட்டு செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
