ஒவ்வொரு நாளும் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மேலும் பல ஹாலிவுட் பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதை அவர்களே உறுதி செய்துவருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகை ஆலி வென்ட்ஒர்த், தானும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

தன்னுடைய தனிமை படுத்தப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு நடிகை ஆலி வென்ட்ஒர்த், சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளதாவது....  "எனக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை எனக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது, அதிக காச்சல், உடல் வலி மற்றும் நெஞ்சு வலி இருக்கிறது. எனது  குடும்பத்திடம்  இருந்து விலகி இருக்கிறேன். என்னால் முடிய வில்லை"  என வேதனையோடு இந்த பதிவை போட்டுள்ளார்.

கொரோனாவின் சுயரூபம் தெரியாமல், தயவு செய்து யாரும் அதனுடன் விளையாட வேண்டாம். இது உயிர் சம்மந்தப்பட்ட விஷயம், எனவே அரசாங்கம் சொல்லும்படி ஊரடங்கு உத்தரவை மதித்து, வீட்டின் உள்ளேயே இருந்து உங்களையும் உங்களை நம்பி இருப்பவர்களையும் காப்பாற்றுங்கள் இது ஒன்று தான் கொரோனாவில் இருந்து விடுபட தீர்வு.