famouse actress take decision for divource

சினிமா பிரபலங்கள் என்றாலே திருமணம் செய்துக்கொள்வதும், கணவரிடம் இருந்து விவாகரத்துப் பெறுவதும் மிகவும் சாதாரண விஷயமாகத் தான் பார்க்கப்படுகிறது. ஆனால் இதனை தகர்த்து காதலித்து திருமணம் செய்துக்கொண்டு பலருக்கு உதாரணமாக வாழும் நட்சத்திரங்களும் இருக்கின்றனர். 

தற்போது கடந்த 2016 ஆம் ஆண்டு, பிரபல பாலிவுட் நடிகை பாபி டார்லிங் என்பவர் ,போபாலை சேர்ந்த ராம்னிக் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 

பாபி டார்லிங் இந்தி படங்கள் மட்டும் இன்றி பஞ்சாப் மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர்.

இந்நிலையில் திருமணம் ஆனது முதல் இவர்களுக்குள் சிறு சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு நிலையில் அது பெரிதாகி, தற்போது பாபி தன் கணவரிடமிருந்து விவாகரத்து பெற முடிவு செய்துள்ளார்.

இந்த விசாரணையில், பாபியை ராம்னிக் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், தினமும் குடித்து விட்டு வந்து ரத்தகாயம் ஏற்படுமளவுக்கு தாக்குவதாகவும், மேலும் பாபி சம்பாதித்த சொத்துக்களை அபகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

இதனால் பாபி கொடுத்த புகாரின் அடிப்படையில், ராம்னிக்கை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.