பிரபல நடிகர் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ள சம்பவம், பாலிவுட் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ஹிந்தி நடிகர் ஐகேஷ் முகாதி. இவர் பிரபல பாலிவுட் நடிகை பரினிதி சோப்ரா, சித்தார்த் மல்ஹோத்ரா உள்ளிட்டோர் நடித்த 'ஹசி தோ பஸி'  உள்ளிட்ட பல இந்தி படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். மேலும், பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். 

இந்நிலையில் இவருக்கு சில தினங்களுக்கு முன் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் அவருடைய உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வந்ததால் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர் மருத்துவர்கள்.

மேலும் செய்திகள்: ஜோ-க்கு சமைத்து போட்டு அசத்திய சூர்யா.... லாக்டவுன் நேரத்தில் சமையல்காரராக மாறி அட்ராசிட்டி...!
 

ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.  இவருடைய மறைவிற்கு இந்தி நடிகர், நடிகைகள் தொடர்ந்து தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். கடந்த ஒரு சில மாதங்களாகவே,  இந்தி திரையுலக பிரபலங்கள் தொடர்ந்து மரணம் அடைந்து வருவது ரசிகர்களை  அதிர்ச்சியடைய செய்துள்ளது.

புற்றுநோய் காரணமாக பாலிவுட் முன்னணி நடிகர் ரிஷிகபூர், இர்பான்கான் ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்த நிலையில், டிவி நடிகர் மன்மீது கிரேவல் ஊரடங்கு காரணத்தால், நடிக்க வாய்ப்புகள் இல்லாமல் தற்கொலை செய்து கொண்டு சமீபத்தில் உயிரிழந்தார். இவர்களை தொடர்ந்து தற்போது உடல்நல பிரச்சனை காரணமாக ஐகேஷ் முகத்தி மரணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.