திரைத்துறையை சேர்ந்த நடிகர், நடிகைகளின் குழந்தைகளும் பிற்காலத்தில் நடிப்பு துறைக்கு வருவது மிகவும் சகஜமான ஒன்று தான். குறிப்பாக இளம் வயது முதலே தங்கள் தாய், தந்தையின் புகழ், அவர்கள் மீது தொடர்ச்சியாக படுவது, அவர்களையும் திரைத்துறை பக்கம் ஈர்க்கிறது என்றே கூறலாம். 

அந்த வகையில், இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் அளவிற்கு பன்முக திறமையோடு வளர்ந்த ஒரு நடிகை தான் ஸ்ரீதேவி. திரைத்துறையில் அவரது இடம் அவர் இறப்புக்கு பிறகும் வெற்றிடமாகவே உள்ளது என்றால் அது மிகையல்ல. இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

அண்மையில் ஒரு பிரபல செய்தியை நிறுவனத்திற்கு பேட்டி அளித்த ஜான்வி கபூர், கடந்த சில காலமாக AI தொழில்நுட்பம் என்பது மிகவும் சர்வ சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது என்றும், ஆனால் இது தன்னை பெரிய அளவில் பயமுறுத்துகிறது என்றும் கூறியுள்ளார். பள்ளி பருவத்தில் அவர் நான்காம் வகுப்பு படிக்கும் பொழுது நடந்த ஒரு சம்பவத்தை பற்றி விவரித்த ஜான்வி, தான் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் யாஹூ நிறுவனத்தின் வலைதளத்தில் தானும் நடிகையாக மாற உள்ளதாக ஒரு செய்தி வந்ததை கண்டு அதிர்ந்து போனதாக கூறியுள்ளார். 

Chandramukhi 2 : சும்மா பிண்ணிடீங்க... 'சந்திரமுகி 2' படத்தை பார்த்து வியர்ந்து பாராட்டிய ரஜினிகாந்த்!

எப்போதோ தனது தந்தை மற்றும் தாயுடன் பொதுவெளியில் அவர் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அவ்வாறு செய்தி வெளியானது என்றும் அவர் கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் ஏறத்தாழ அனைத்து ஆபாச இணையதளங்களிலும் தன்னுடைய புகைப்படங்கள் மார்பின் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை ஜான்வி கபூர் முன்வைத்துள்ளார். 

இளம் நடிகையான தன்னுடைய திரை வாழ்க்கைக்கு இது மாபெரும் இடையூறாக அமைகிறது என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். சிறுவயது முதலிலேயே தாய் மற்றும் தந்தை திரைத்துறையில் இருந்த காரணமாக அவர்கள் மீது படும் அந்த லைம் லைட் தன் மீதும் பட்டது என்றும், அப்பொழுது அவர் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் இன்றளவும் பல்வேறு ஆபாச இணையதளங்களில் மார்பிங் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகையின் மகளாக திரைத்துறைக்குள் நுழைந்த ஜான்வி கபூர், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் திரை துறையில் பயணம் செய்து வருகிறார். பாலிவுட் உலகில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவரும் ஜான்வி, தமிழ் திரை உலகில் நடிக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் முன்னணி நடிகை ஒருவர் வைத்துள்ள இந்த பரபரப்பு புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஹாலிவுட்டுக்கு டஃப் கொடுக்கும் சுந்தர் சி! 'அரண்மனை 4' ஃபர்ஸ்ட் லுக் - ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியானது!