தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் தல அஜீத்துக்கு என்று மிகப்பெரிய அளவிலான வட்டாரமே இருக்கிறது. அவரின் எளிமை மற்றும் எல்லோரிடமும் சகஜமாக பழகும் பண்பு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டிருக்கும் தல ரசிகர்கள் அவருக்காக எதையும் செய்ய துணிந்தவர்கள். அஜீத் தற்போது விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்துவருகிறார். 

இந்த ஆண்டு பொங்கல் ரிலீசுக்காக மும்முரமாக தயாராகி வரும் இந்த படத்தின் மோஷன் போஸ்டரை காண வெகு ஆவலுடன் காத்திருக்கின்றனர் அஜீத் ரசிகர்கள்.

அவர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டும் விதமாக விஸ்வாசம் அப்டேட்டுகள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை அஜீத்தை எக்கசக்கமாக புகழ்ந்துவருகின்றனர் அவருடன் விஸ்வாசம் படத்தில் பணியாற்றி இருக்கும் பிரபலங்கள். 

மெர்சல் படத்தில் சிட்டுக்குருவி எனுக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த பாட்டி கூட அஜீத்தை கடவுள் மாதிரி என உருக்கமாக கூறி இருந்தார்.

தற்போது விஸ்வாசம் படத்தில் அஜீத்துடன் பணியாற்றி இருக்கும் இன்னொரு பிரபலமும் அதையே தான் வேறு விதமாக சொல்லி இருக்கிறார். அஜீத்துடன் இந்த படத்தில் பணியாற்றி இருக்கும் எழுத்தாளர் பத்மாவதி, அஜீத்தை கோவில் என்று குறிப்பிட்டிருக்கிறார். 

தனது டிவிட்டர் பக்கத்தில் அஜீத் குறித்து குறிப்பிட்டிருக்கும் பத்மாவதி பின்வருமாறு தெரிவித்திருக்கிறார்
”கோவிலுக்குள் போன ஒரு பாசிட்டிவ் வைப்ரஷன் இருக்குற மாதிரி அஜித் சார் பக்கத்துல போனாலும் ஒரு பாசிட்டிவ் வைப்ரஷன் இருக்கும் !

லைட் மேன், கேமரா மேன் எல்லார் கூடையும் ரொம்ப எளிமையா பழகுவார் ! எந்த ஒரு உதவியாளர்கள், பந்தா இன்றி இருப்பார் செட்ல” என அந்த ட்வீட்டில் அவர் தெரிவித்திருக்கிறார். 

அதே வைப்ரேஷனை திரையிலும் உணர்வதால் தானே அவருக்காக இத்தனை ரசிகர்கள் உருவாகி இருக்கிறார்கள். என அவரின் இந்த ட்வீட்டுக்கு சந்தோஷமாக பதிலளித்து வருகின்றனர் அஜீத் ரசிகர்கள்.