பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் ராஸ். டெல்லி பெல்லி, தேத் இஷ்கியா, மும்பை எக்ஸ்பிரஸ், பாம்பே டு கோவா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இவர் சிவகார்த்திகேயன் முதன் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்த காக்கிச்சட்டை படத்தில் வில்லனாக நடித்துள்ளார். 

 

இதையும் படிங்க: காதல் மனைவியுடன் கருணாஸ் நடத்திய அசத்தல் போட்டோ ஷூட்... கறுப்பு உடையில் கலக்கல் கிளிக்ஸ்...!

முன்னணி நடிகரான விஜய் ராஸ் படப்பிடிப்பு தளத்தில் சக நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, மஹாராஷ்டிரா போலீஸார் விஜய் ராஸை கைது செய்தனர். விஜய் ராஸ் ராம்நகர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

இதையும் படிங்க: நம்ம கண்ணம்மாவா இது?... டைட் டி-ஷர்ட்டில் வெளியிட்ட தாறுமாறு போட்டோஸ்...!

வித்யா பாலன் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ஷெர்னி’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இன்று விஜய் தாஸ் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.