ஐதராபாத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தன்னை 140க்கும் மேற்பட்ட ஆண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் திரைத்துறையைச் சேர்ந்த சிலரும் அடக்கம் என தகவல்கள் வெளியாகின. அதில் பிரபல டி.வி. சேனல் தொகுப்பாளரான ப்ரதீப் மச்சிராஜுவின் பெயரும் தகவல்கள் வெளியாகின. 

இதை கையில் எடுத்த ஊடகங்களும், யூ-டியூப் சேனல்களும் தாறுமாறாக விமர்சிக்க ஆரம்பித்தன. சோசியல் மீடியாவிலும் ப்ரதீப்பிற்கு எதிராக கண்டனங்கள் குவிய ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சியான அவர் தனக்கு இந்த பிரச்சனையில் தொடர்பு இல்லை என விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

இதையும் படிங்க: இன்று சிவகார்த்திகேயன் வீட்டில் விசேஷமான நாளாம்... நீங்கள் பார்த்திடாத புகைப்படங்களுடன் அசத்தல் தகவல்கள் !

அதில், ''பல செய்தி நிறுவனங்களும் யூடியூப் சேனலும் என் மீது தவறான குற்றசாட்டை முன் வைக்கிறார்கள். என் போட்டோவை பயன்படுத்துகிறார்கள். இவை எல்லாம் ஆதரமற்றவை. இதனால் நானும் எனது குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். இதனால் எங்களுக்கு ஏதாவது ஆனால், யார் பொறுப்பு. சோஷியல் மீடியா வலிமையான ஆயுதம். ஆனால், அதை சிலர் இப்படி தவறாக பயன்படுத்துகிறார்கள். தேவையில்லாமல் என்மீது ஆதாரமற்ற குற்றசாட்டுகளை சொல்வபர்கள், ட்ரோல் செய்பவர்கள் என அனைவரையும் நான் சும்மா விட மாட்டேன்'' என அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.