இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக மே 31ம் தேதி வரை 4ம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வாழ்வாதாரத்தை இழந்து ஒருவேளை சாப்பாட்டிற்கு கூட வழியின்றி தவிக்கும் புலம் பெயர் தொழிலாளர்கள் பலரும் தங்களது சொந்த ஊருக்கு பல ஆயிரம் கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். பிஞ்சு குழந்தைகள், வயதான முதியோர்கள், கர்ப்பிணி பெண்கள் என பலரும் காலில் செருப்பு கூட இல்லாமல் சொந்த மண்ணை பார்த்தால் போதும் என பசித்த வயிறுடன் பயணம் செய்கின்றனர். 

இதையும் படிங்க: மீரா மிதுன், யாஷிகாவையே பின்னுக்குத் தள்ளிய இலங்கை அழகி... முன்னழகை காட்டி மிரளவைக்கும் ஹாட் செல்ஃபி...!

ஊரடங்கு காரணமாக சினிமா, சீரியல்கள் உள்ளிட்ட அனைத்து விதமான படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அதனால் வேலை இழந்து தவிக்கும் தினக்கூலி சினிமா தொழிலாளர்களுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இந்த நெருக்கடி நிலையில் கடன் தொல்லை காரணமாக பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: காதலருடன் பிரேக் அப்?... நயன்தாராவை அடுத்து இளம் நடிகையை பாடாய் படுத்தும் காதல்...!

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் மன்மீட் கர்வால். இவர் கடந்த இரண்டு மாதங்களாகவே லோன் மற்றும் வாடகை செலுத்த முடியாத அளவிற்கு மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருந்து வந்துள்ளார். இதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த மன்மீட் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மன்மீர் கர்வால் கடன் தொல்லை காரணமாக இந்த சோகமான முடிவை எடுத்தது தெரிய வந்துள்ளது. 

இதையும் படிங்க: செல்ஃபி எடுக்க போன இளம் நடிகையிடம்... சிம்பான்ஸி குரங்கு பார்த்த வேலையை நீங்களே பாருங்க....!

மன்மீர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட போது ஷேர் விழும் சத்தம் கேட்டு அவருடைய மனைவி ஓடிச்சென்று பார்த்துள்ளார். கணவர் தூக்கில் தொங்குவதை பார்த்த அவர் சத்தம் போட்டுள்ளார், ஆனால் கொரோனா தொற்று அச்சம் காரணமாக அக்கம் பக்கத்தினர் யாரும் உதவ முன்வரவில்லை என்று அம்மாநில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நெருக்கடி நேரத்தில் மனிதர்களிடம் இருக்கும் மனிதநேயம் என்பது மண்ணில் புதைக்கப்படுவது அதிர்ச்சியளிக்கிறது.