கலிபோர்னியாவின் பர்பாங்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக  34 வயதான நடிகரும், பாடகருமான Chris Trousdale மரணமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸின் பிரேத பரிசோதனை அறிக்கையில் , "2020 ஜூன் 2 அன்று Chris Trousdale கொரோனா தொற்றால் ஏற்பட்ட விளைவுகள் காரணமாக இறந்தள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க தொலைக்காட்சியில் நடிகராக இருந்த இவர், மிக சிறிய வயதிலேயே பலருக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.  இவரது இழப்பு, அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் என அனைவரையுமே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

 " கிறிஸ் 1999 இல் இருந்து தெருவில் இருக்கும் குழந்தைகளுக்காக அமைப்பு ஒன்றில், உறுப்பினராக இருந்து வருகிறார்.

ட்ரீம்ஸ்ட்ரீட் என்ற இந்த அமைப்பின் உறுப்பினர்கள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து Chris Trousdale க்கு , தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவில், ஜெஸ்ஸி மெக்கார்ட்னி இவரை பற்றி கூறுகையில், "இசைத் துறையில் எனது ஆரம்ப நாட்களிலிருந்து ஒரு பழைய நண்பர் கிறிஸ் , கோவிட் -19 காரணமாக காலமானார் என்று சொல்வது எனக்கு வேதனையாக இருக்கிறது. கிறிஸுக்கு  அழகான ஆளுமை இருந்தது.

ட்ரீம்ஸ்ட்ரீட் என்று அழைக்கப்படும் அமைப்பில் வளர்ந்து வரும் திறமை கொண்ட இளம் குழந்தைகளாக அவர், இசை மற்றும் செயல்திறன் மீது மிகுந்த அன்பைப் பகிர்ந்து கொண்டனர். 
இசைக்குழுவின் மற்றொரு உறுப்பினர், மாட் பாலிங்கருக்கும், "இன்று ஒரு கடினமான நாள் என தெரிவித்துள்ளார். 

8 வயதில் மேடையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், Chris Trousdale என்பது குறிப்பிடத்தக்கது.