சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகன். இந்த படத்தை தொடர்ந்து இரண்டாவது படத்திலேயே இவருக்கு அடித்தது ஜாக்பாட்.  அதிரடியாக தளபதி விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்திருக்கும் 'மாஸ்டர் ' படத்தின் கதாநாயகியாக மாறினார். இவருக்கு கிடைத்த இந்த வாய்ப்பை கண்டு, பல நடிகைகள் அப்போதைக்கு செம்ம காண்டாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் ஏப்ரல் 9ம் தேதி ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய மாஸ்டர் படம் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிப்போனது. படத்தில் சில போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் மட்டும் முடிக்கப்படாமல் இருந்த நிலையில், அந்த பணிகளும் கடந்த ஓரிரு வாரமாக முடிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த படத்தின் ட்ரைலர் இன்னும் சில தினங்களில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படம் வெளியாக தாமதம் ஆனாலும் பரவாயில்லை ட்ரைலரையாவது இப்போது வெளியிடுங்கள் என தளபதியின் ரசிகர்களும், படக்குழுவிற்கு அன்பு கோரிக்கைகளை வைத்து வருகிறார்கள். 

ஒருபக்கம் மாஸ்டர் படத்தில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்தே மாளவிகாவின் அட்ராசிட்டி எல்லை தாண்டி போய் கொண்டிருக்கிறது. குட்டை டவுசர், முன்னழகு தெரிய ஹாட் டிரஸ், இடை தெரிய சேலை என சகட்டு மேனிக்கு கவர்ச்சி காட்டி வருகிறார். இந்த நேரத்தில் மாளவிகா மோகனின் சின்ன வயசு போட்டோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதே சிரிப்புடன் அம்சமாக அமர்ந்திருக்கும் அந்த குழந்தையின் புகைப்படம் இதோ...