நடிகையும், புகழ்பெற்ற தயாரிப்பாளர் ஆர்.என். மந்திரேவின் பேத்தியும் மற்றும் தயாரிப்பாளர் சுனந்தா முரளி மனோகரின் மருமகளுமான ஷர்மிளா மந்திரே ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி,  ஜாகுவார் காரில் மிகவும் வேகமாக வந்து பொது சொத்திற்கு சேதம் ஏற்படுத்தியது மட்டும் இன்றி, இந்த விபத்தில் சிக்கி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சுனந்தா முரளி மனோகர்:

தமிழில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'ஜீன்ஸ்', 'ஜோடி', 'மின்னலே'  'தாம் தூம்' போன்ற பட படங்களை தயாரித்துள்ளவர்.

நடிகை ஷர்மிளா:

இவரின் மருமகளான ஷர்மிளா மந்திரே பல கன்னட படங்களில் நடித்துள்ளார்.  மேலும் மிரட்டல் படத்தில் நடிகர் வினய்க்கு  ஜோடியாக தமிழில் அறிமுகமானார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறாமல் படுதோல்வி அடைந்தது.

இதை தொடர்ந்து 'இவானுக்கு எங்கையோ மச்சம் இருக்கு' மற்றும்  'சண்டகரி' போன்ற படங்களை தயாரித்தார். 

மேலும் செய்திகள்: அடையாளம் தெரியாமல் மாறி போன முன்னணி நடிகையா இது? யாருனு தெரிஞ்ச செம்ம ஷாக் ஆகிடுவீங்க..!

விபத்து:

இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை) அதிகாலையில், ஷர்மிளா மந்திரே அவரது ஆண் நண்பர் லோகேஷ் வசந்த் என்பவருடன் தனது ஜாகுவார் காரில் வேகமாக சென்றபோது, ​​பெங்களூரு மத்திய வணிக பகுதியான, வசந்த் நகர் அண்டர்பிரிட்ஜில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ரயில்வேவுக்கு சொந்தமான இடத்தில் மோதியது.

இதையடுத்து , ஷர்மிளா மற்றும் அவருடைய ஆண் நபர் இருவரும் விபத்து ஏற்பட்ட இடத்தின் அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

போலீஸ் விசாரணை:

மேலும் செய்திகள்: கொரோனா 11 வது நாள்...! பிள்ளைங்களுக்கு சூப்பர் விஷயத்தை கூறி ஸ்கோர் செய்த சூரி!

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். மேலும் பொது சொத்தை சேதப்படுத்தியது மற்றும் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்ட நிலையில், இப்படி அரசாங்கத்தை மதிக்காமல் நடந்து கொண்டது ஆகியவற்றின் கீழ் இவர்கள் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.