முன்னணி நடிகைகள் சிலர், ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி இருப்பதால், அவ்வப்போது தங்களுடைய சிறிய வயது நியாபகங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் 90 களில், நடிப்பு, நடனம், கவர்ச்சி என அனைத்திலும் டாப்பாக இருந்த முன்னணி நடிகை ஒருவர் தன்னுடைய குழந்தை பருவ புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

நடிகை சிம்ரன்:

விஐபி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கடந்த 1997 ஆம் ஆண்டு அறிமுகமாகி, தளபதிக்கு ஜோடியாக ஒன்ஸ் மோர், சூர்யாவிற்கு ஜோடியாக நேருக்கு நேர், பூச்சூடவா, கொண்டாட்டம், அவள் வருவாளா உள்ளிட்ட பல படங்களில் கலக்கிய முன்னணி நடிகையான சிம்ரன் தான், தன்னுடைய குழந்தை பருவ புகைப்படத்தை தற்போது பகிர்ந்துள்ளார்.

அடையாளம் தெரியாத மாற்றம்:

இந்த புகைப்படத்தில் இருப்பது குட்டி சிம்ரனா?  என ஆச்சர்யப்படும் அளவிற்கு ஆள் அடையாளம் தெரியாத மாற்றம் இவரிடம் உள்ளது. எனினும் கியூட் புன்னகையில் ரசிகர்கள் மனதை வசீகரிக்கிறார் குட்டி சிம்ரன்.

புகைப்படத்தோடு சொன்ன தகவல்:

இந்த புகைப்படத்தை வெளியிட்டு, தன்னுடைய ரசிகர்களுக்கு சிம்ரன் கூறியிருப்பதாவது... 'பழையவற்றை வெடித்துத்தள்ளுங்கள்... குழந்தை பருவத்தை நினைத்து பார்க்கிறேன். கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் ஒரு பரிசு கிடைக்கிறது. புன்னகைக்க மறக்காதீர்கள். உங்களின் அணைத்து விருப்பங்களுக்கு நன்றி. வீட்டிலேயே பத்திரமாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.