திரையுலக வெளிச்சத்தில் இருந்து சில காலம் ஓய்வெடுத்து விட்டு, இப்போது மீண்டும் நாயகனாக திரையில் கலக்கிக் கொண்டிருப்பவர் அரவிந்த் சாமி. தனி ஒருவன் படத்தில் ஹீரோவுக்கு நிகராக இவரது நடிப்பும் பேசப்பட்டது.

அதனை தொடர்ந்து இப்போது பல திரைப்படங்களில் கமிட் ஆகி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார் இவர். சமீபத்தில் அரவிந்த் சாமி நடிப்பில் ”பாஸ்கர் ஒரு ராஸ்கல்” திரைப்படம் ரிலீசாகியது. மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன ”பாஸ்கர் தி ராஸ்கல்” படம், தமிழில் அந்த அளவிற்கு வெற்றிகரமாக போகவில்லை. தற்போது அரவிந்த் சாமி நடிப்பில் சதுரங்க வேட்டை 2 திரைக்கு வரவிருக்கிறது.

சதுரங்க வேட்டை திரைப்படத்தின் முதல் பாகம் ஏற்கனவே நல்ல வசூலை கொடுத்ததுடன், பல்வேறு கோணங்களிலும் பாராட்டை பெற்றது. இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில், அரவிந்த் சாமி உடன் திரிஷா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் உடனான ஒரு பேட்டியின் போது, அரவிந்த் சாமி தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர்கள் என 11 பேர் கொண்ட பட்டியலை கூறினார். அதில் தோனியை தான் தனக்கு மிகவும் பிடித்த வீரர் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். சச்சின், கவாஸ்கர் என பல நல்ல வீரர்கள் இருந்தாலும், அவர்கள் யாரும் இதுவரை ஒரு நல்ல கேப்டனாக தங்களை நிரூபித்ததில்லை.

தோனி எந்த வித ஈகோவும் இல்லாத ஒரு கேப்டன். நான் கேப்டனாக தேர்ந்தெடுத்தால் அவரை தான் தேர்வு செய்வேன். அவர் பலமுறை தான் ஒரு சிறந்த கேப்டன் என்பதை நிரூபித்திருக்கிறார். என தெரிவித்திருக்கிறார் அரவிந்த் சாமி.