famous Tamil actor building a Hindu temple

ஆக்‌ஷன் கிங் அர்ஜூனை சமீபகாலமாக திரையில் அதிக அளவில் காண முடியவில்லையே! என ஏக்கத்தில் இருந்தனர் அவரது ரசிகர்கள். அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் இரும்புத்திரை திரைப்படத்தில், ஸ்மார்ட்டான வில்லனாக நடித்து ஒரு கலக்கு கலக்கிவிட்டார் அர்ஜூன்.

இரும்புத்திரை திரைப்படத்தில் அர்ஜூன் செய்திருந்தது வில்லன் ரோல் தான். ஆனாலும் அவர் திரையில் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் விசில் சத்தம் அரங்கத்தையே அதிர வைத்தது. அந்த அளவிற்கு கூலாக நடித்திருந்தார். என பல்வேறு விமர்சகர்களும் அர்ஜூனை பாராட்டி இருந்தனர்.

ஆக்‌ஷன் கிங்காக இருந்தாலும் அர்ஜூனுக்கு ஆன்மீகத்தின் மீது ஈடுபாடு மிக அதிகம். இவர் தற்போது ஒரு ஆஞ்சநேயர் கோவிலை கட்டி வருகிறார். இந்த கோவிலின் கோபுரம் மட்டும் 27 டன் இரும்பால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த கோவிலின் சிற்ப பணிகளில் அர்ஜூன் ஈடுபட்டிருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, அர்ஜூனா இது? என ரசிகர்களை ஆச்சரியப்படவைத்திருக்கிறது. ஆஞ்சநேயர் மீது அதிகம் பக்தி கொண்ட அர்ஜூன் செய்து வரும், இந்த ஆன்மீக திருப்பணியை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.