பிரபல பாடகர் சாலை விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே அதிர்ச்சி மரணம்..! சோகத்தில் திரையுலகம்..!

பிரபல பஞ்சாபி பாடகர் ஆஸ்திரேலியாவில் நடந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

famous singer death in road accident

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பஞ்சாபி பாடகர் நிர்வைர் சிங், கடந்த செவ்வாய்கிழமை மதியம் 3.30 மணியளவில் டிகர்ஸ் ரெஸ்டில் உள்ள புல்லா-டிகர்ஸ் ரெஸ்ட் ரோட்டில் அதீத வேகத்தில் தனது காரை ஓட்டி சென்றுள்ளார்.  அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து, அருகே வந்த ஜீப் மீது மோதியது. இதில் பாடகர் நிர்வைர் சிங் ஓட்டி வந்த கார் சாலையிலே கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் நிர்வைர் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் செய்திகள்: கடல் கன்னி போல்... உடலோடு ஒட்டிய ஓவர் டைட் உடையில் ஸ்டக்ச்சரை டக்கராக காட்டும் மாளவிகா மோகனன்!

இந்திய வம்சாவளியை சேர்ந்தவராக இருந்தாலும் கடந்த ஒன்பது ஆண்டுகளாக இவர் ஆஸ்திரேலியாவில் தான் வசித்து வருகிறார். இவரது இந்த திடீர் மரணம், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதை தொடர்ந்து இவருக்கு சமூக வலைத்தளம் மூலம் பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.

famous singer death in road accident

 நிர்வைர் சிங் 'மை டர்ன்' ஆல்பத்தில் இடம்பெற்ற 'தேரே பினா' பாடலின் மூலம், புகழ் பெற்றவர்.  இதை தவிர  'தர்தா அ தில்', 'ஜே ரஸ்கி', 'ஃபெராரி ட்ரீம்' மற்றும் குர்லெஸ் அக்தருடன் 2018 டூயட் பாடலான 'ஹிக் தோக் கே' என பல ஹிட் பாடல்களை பாடி மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இந்த திடீர் மாறைவு, பஞ்சாபி திரையுலகினர் மற்றும் பாடகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் செய்திகள்: ரவீந்தரை திருமணம் செய்துள்ள.. சீரியல் நடிகை மஹாலட்சுமி முதல் கணவர் யார்? விவாகரத்துக்கு என்ன காரணம் தெரியுமா?
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios