இசை நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது மாரடைப்பால் பிரபல பாடகர் மரணமடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்கு வங்கத்தை சேர்த்த பிரபல பாடகரான அஜீஸ் பெங்காலி, இந்தி, ஓடியா ஆகிய மொழிகளில் பல பாடல்களை பாடி பிரபலமானவர்.

இவர் நேற்று முன்தினம் கொல்கத்தாவில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்தவுடன் அங்கிருந்து விமானம் மூலம் மும்பைக்கு புறப்பட்டார். 

மும்பை விமான நிலையம் வந்தடைந்த அஜீஸுக்கு, திடீர் என படப்படப்பு மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அங்கிருந்து உடனடியாக அவரை கேப் மூலம் நானாவதி மருத்துவமைக்கு கொண்டு சென்றனர். 

அப்போது இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அஜீஸின் இந்த திடீர் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.