famous singer attacked for gun shoot admited in hospital

சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தனக்கென மிகபெரிய ரசிகர் கூட்டதையை வைத்துள்ள புகழ்பெற்ற பாடகர் ரிச் தி கிட் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டிமிட்ரி லெஸ்லி ரோஜர் என்ற ராக் இசைப் பாடகர், ரிச் தி கிட் என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் புகழ் பெற்றவர். இவரின் வெள்ளை மலைப்பாம்பு வீடியோ மிகவும் புகழ் பெற்றது.

இந்நிலையில் இவர், பாடகர் ரிச் தி கிட் தனது காதலியுடன் வீட்டில் இருந்த போது துப்பாக்கியுடன் வந்த மர்ம கும்பல் இருவரையும் சரமாரியாகத் தாக்கியது. இதில் படுகாயமடைந்த இருவரும் லாஸ் ஏஞ்சலிசில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்துள்ள ரிச் தி கிட் அபாய கட்டத்தில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.