பாலிவுட்டில் 70 மற்றும் 80-களில் பிரபல பாடகியாக வலம் வந்தவர் அனுராதா பட்வால். சினிமா பாடல்களைத் தாண்டி பல பக்தி பாடல்களையும் பாடியுள்ளார். இவர் பாடிய காயத்ரி மந்திரம் பாடலை தற்போதும் பல வீடுகளில் கேட்கலாம். முரளி, சிம்ரன் நடித்த கனவே கலையாதே படத்தில் பூசு மஞ்சள் பாடலை பாடியிருந்தார். சிறந்த பாடகிக்கான தேசிய விருது மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றவர். 

இந்நிலையில் அனுராதா பட்வாலின் மகனும், இசையமைப்பாளருமான ஆதித்யா பட்வால் உடல் நலக்குறைவால் உயிரிழந்தது திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 35 வயதே ஆன ஆதித்யா பட்வாலுக்கு சிறுநீரக பிரச்சனை இருந்துள்ளது. இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆதித்யா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 

 

இதையும் படிங்க: தொழிலதிபரை கரம் பிடித்தார் நடிகை மியா ஜார்ஜ்... சர்ச்சில் எளிமையாக நடந்த திருமண புகைப்படங்கள்...!

பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான ஷங்கர் மகாதேவன் தனது முகநூல் பக்கத்தில் ஆதித்யா மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், எங்களுக்கு பிடித்த ஆதித்யா பட்வால் இறந்துவிட்டார். இதை என்னால் நம்பவே முடியவில்லை. என்ன என்ன ஒரு அருமையான இசையமைப்பாளர், மனிதர் அவர். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அவர் இசையில் ஒரு பாடலை பாடினேன். இன்னும் ஏற்க முடியவில்லை. லவ் யூ பிரதர்... உங்களை மிஸ் பண்ணுகிறேன் என பதிவிட்டுள்ளார்.