தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வந்த "பிகில்" திரைப்படம் 300 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் கிங்காக விஜய்க்கு பெருமை சேர்ந்துள்ளது. ஏற்கெனவே இப்படம் அஜித்தின் "விஸ்வாசம்" பட வசூல் சாதனை முறியடித்துவிட்டதாக கூறி விஜய், அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் கட்டிப்புரளாத குறையாக சண்டை போட்டுக்கொண்டனர். அப்போது அந்த பிரச்னைக்கு ஆரம்ப புள்ளி வைத்தவர் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன். இப்போது சற்று தணிந்துள்ள அந்த பிரச்சனையை மீண்டும் கிளப்பும் விதமாக அதிரடி கருத்து ஒன்றை தெரிவித்து, அஜித் ரசிகர்களை வெறுப்பேற்றியுள்ளார். 

"பிகில்" படம் 300 கோடி ரூபாய் வசூல் செய்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள தனஞ்செயன், தெலுங்கு மற்றும் இந்தியில் கவனம் செலுத்தினால் விஜய்யால் 500 கோடி வரை கூட சுலபமாக தொடலாம் என்று கூறியுள்ளார். இதுல என்ன பிரச்சனை, ஒண்ணும் இல்லையேன்னு தான் தோணும். ஆனால் அதுக்குப்புறம் தான் மெயின் மேட்டரே. விஜய் பற்றி பேசிய தனஞ்செயன், அடுத்து அஜித் படங்களும் 500 கோடி வசூலிக்கும். ஆனால் அதுக்கு அவர் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என அட்வைஸ் பண்ணியிருக்கார். 

மேலும் விஜய் ஒரு ஆடியோ ரிலீஸ் பங்ஷனிலாவது கலந்து கொண்டு, பேசிவிட்டு போய்விடுகிறார். அது எங்களுக்கு செம்ம மார்க்கெட்டிங்காக அமைகிறது. ஆனால் அஜித் எந்த புரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் தலை காட்டுவதில்லை. அதுதான் பெரிய சிக்கல், அதனால புரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் அஜித் பங்கேற்றால் அவரது மார்க்கெட் எங்கேயோ போயிடும் என கருத்து தெரிவித்துள்ளார்.