இந்த 2020 ஆம் ஆண்டை நம்மால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. காரணம் பல திறமையான கலைஞர்களை இழந்துள்ளோம். பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் என அணைத்து திரையுலக ரசிகர்களும் தங்கள் மனம் கவர்ந்த சில பிரபலங்களை இழந்துள்ளனர். கொரோனா பீதி ஒரு பக்கம் என்றால், அடுத்தடுத்து மரணிக்கும் பிரபலங்களின் செய்தி திரையுலகினர் இடையே அதிர்ச்சியை அதிகரித்து வருகிறது. 

 

இதையும் படிங்க: அஜித்துடன் ‘ரெட்’ படத்தில் நடித்த நடிகையா இது?... 43 வயதிலும் சும்மா நச்சுன்னு இருக்கும் போட்டோ...

பாலிவுட்டில் இர்பான் கான், ரிஷி கபூர், சுஷாந்த் சிங் ராஜ்புட் என அடுத்தடுத்து திரையுலகை அலங்கரித்த நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாக மறைந்து அதிர்ச்சியை கொடுத்த நிலையில், தற்போது கன்னட திரையுலகில் புகழ்பெற்ற கலைஞர்களின் இழப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரம் கன்னட திரையுலகில் ஜாம்பவான் இசையமைப்பாளராகவும் 300க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தவருமான ராஜன் உயிரிழந்தார். அதேபோல் பிரபல இயக்குநரான விஜய் ரெட்டி உடல் நலக்குறைவால் சென்னையில் மரணமடைந்தார். 

 

இதையும் படிங்க: சன் டி.வி. ரசிகர்களுக்கு அதிர்ச்சி... விரைவில் நிறுத்தப்படுகிறது பிரபல சீரியல்...!

இந்நிலையில், பிரபல கன்னட தயாரிப்பாளர் எச்.கே.ஶ்ரீனிவாஸ் நேற்று மரணமடைந் துள்ளார். அவருக்கு வயது 70. கீஸ், ராகிணி நடித்த குண்டனா மடுவே, பட்டன்கா பன்டா புட்டா, சந்தன் சிகுரு என பல்வேறு படங்களை கன்னடத்தில் இயக்கியுள்ளார். கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு  தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இந்த செய்தி கன்னட திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.