தெலுங்கு திரையுலகில் நடிகர், இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட ராவி கொண்டலா ராவ் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்த செய்தி ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர்,ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார். 

 

இதையும் படிங்க: கோடிகளை கொட்டிக் கொடுக்க வந்த தயாரிப்பாளர்... தெருக்கோடி வரை விரட்டி விட்ட சாய் பல்லவி...!

தற்போது 88 வயதாகும் அவர் ராதா குமாரி என்ற நடிகையின் கணவருமாவார். ராவி கொண்டலா ராவின் மறைவு குறித்து கேள்விப்பட்ட ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரும் சோகத்துடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 1958ம் ஆண்டு சோபா என்ற படம் மூலமாக திரையுலகில் அடியெடுத்து வைத்த ராவி, இதுவரை 600க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். கடைசியாக 2015ம் ஆண்டு ராம் கோபால் வர்மா இயக்கிய 365 டேஸ் என்ற படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. 

 

இதையும் படிங்க: மருத்துவ செலவிற்கு உதவி கேட்ட பொன்னம்பலம்... மருத்துவமனைக்கே பணம் அனுப்பி வைத்த தல அஜித்...!

மூத்த நடிகரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்துகொண்டார். அவர் தனது பதிவில் “மூத்த நடிகர், எழுத்தாளர், பல்துறை அறிவுஜீவி மற்றும் கலைஞரான ஸ்ரீ ரவி கொண்டலராவ் மரணம் துயரமானது. தெலுங்கனைத் தூண்டும் பாத்திரங்களில், அவரது நடிப்பு வேடிக்கையானது, நகைச்சுவையைச் சேர்க்ககூடியது. அவருடைய ஆத்மாவுக்கு அமைதி அளிக்கும்படி கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்”