தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல ஹிட் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் சிவ பிரசாத் ரெட்டி. இவர் திடீர் என மரணமடைந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவர் சிவ பிரசாத் ரெட்டி.   62 வயதாகும் இவர் நீண்ட நாட்களாக இதயம் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் தான் உடல் நலம் தேறி மீண்டும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு... ஓய்வில் இருந்தார். இந்நிலையில் திடீர் என மூச்சி திணறல் ஏற்பட்டு  இவர் மரணம் அடைந்துள்ள சம்பவம் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திரையுலக நண்பர்கள் கொடுத்த ஊகத்தின் காரணமாக 1985ம் ஆண்டு காமாக்ஷி என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, பல வெற்றிப்படங்களை இவர் கொடுத்துள்ளார்.  

குறிப்பாக கார்த்திகை பௌர்ணமி, கேடி, கிங் மற்றும் பல தெலுங்கு படங்களை தயாரித்துள்ளார்.  இவர் நடிகர் நாகர்ஜுனாவின் நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.