famous model and actress suicid
கடந்த வருடம் சீரியல் மற்றும் ஒரு சில படங்களில், துணை நடிகையாக நடித்த சபர்ணா அவர் தனியாக வசித்து வந்த வீட்டில் நிர்வாணமாக அழுகிய நிலையில் கிடந்தார்.
தற்போது இதே பாணியில் மேலும் ஒரு நடிகை இறந்து கிடந்துள்ளார்.
பிரபல மாடலும், ஒரு சில சீரியல்கள் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளவர் நடிகை கிருத்திகா சவுத்ரி. இவர் மும்பையில் அந்தோரி என்னும் பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.
இவருடைய வீடு கடந்த மூன்று நாட்களாக பூட்டியே கிடந்ததாக தெரிகிறது. இவர் அடிக்கடி படப்பிடிப்பிற்காக வெளியூருக்கு செல்வதால் இதனை அக்கம் பக்கத்தினர் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை.
தற்போது இவருடைய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்துக்கு வீட்டினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது "கிருத்திகா சவுத்திரி" அழுகியநிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
மேலும் இவர் கொலை செய்யப்பட்டாரா...? அல்லது காதல் தோல்வி போன்ற விஷயங்களால் தற்கொலை செய்து கொண்டாரா...? அல்லது வேறு ஏதாவது காரணமா என்கிற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
