தேசிய விருது வென்ற பிரபல இயக்குனர் திடீர் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி

உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த மலையாள இயக்குனர் கே.பி.சஷி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Famous Malayalam Director KP sasi passed away

மலையாள இயக்குனர் கே.பி.சஷி காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சஷி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 64. அவரது மறைவு மலையாள திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவர் எழுத்தாளரும், கம்யூனிஸ்ட் சிந்தனையாளருமான கே தாமோதரனின் மகன் ஆவார். இயக்குனர் கே.பி.சஷி கடந்த 1994-ம் ஆண்டு வெளியான ‘இலையும் முள்ளும்’ படத்தின் மூலம் பிரபலமானார். இப்படத்திற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. இதுமட்டுமின்றி இவர் புகழ்பெற்ற ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார். 

இதையும் படியுங்கள்... ஷூட்டிங் ஸ்பாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 20 வயது சீரியல் நடிகை - சோகத்தில் ரசிகர்கள்

1970ல் ஜேஎன்யுவில் படிக்கும் போது கார்ட்டூன் துறையில் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படமான 'ஏக் அலக் மௌசம்' படத்தின் மூலம் பாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் நந்திதா தாஸ், அனுபம் கேர் மற்றும் ரேணுகா ஷஹானே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பிரபல மலையாள நடிகர் கோபியும் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

இவ்வாறு பல்வேறு மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குனர் கே.பி.சஷியின் மறைவு மலையாள திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவுக்கு ஏராளமான நடிகர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... காங்கிரஸ் மூலம் அரசியல் எண்ட்ரியா? - உண்மையை பளீச் என போட்டுடைத்த திரிஷா

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios