தேசிய விருது வென்ற பிரபல இயக்குனர் மரணம்... கண்ணீரில் மூழ்கிய திரையுலகம்

மலையாள திரையுலகில் பல உன்னதமான படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வந்த கே.ஜி.ஜார்ஜ் இன்று காலமானார். 

famous Malayalam director KG george passed away gan

மலையாள திரையுலகில் நடிகர், எழுத்தாளர், இயக்குனர், டப்பிங் கலைஞர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வந்தவர் கே.ஜி.ஜார்ஜ். வயது முதிர்வு காரணமாக அவதிப்பட்டு வந்த இவர் இன்று இயற்கை எய்தினார். கே.ஜி.ஜார்ஜ் கொச்சியில் உள்ள முதியோர் மையத்தில் சில காலமாக வசித்து வந்தார். பலமுறை மாநில மற்றும் தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

நெல் படத்தின் மூலம் திரைக்கதை ஆசிரியராக சினிமாவுக்குள் நுழைந்த கே.ஜி.ஜார்ஜ் ஸ்வப்நதானம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவர் இயக்கிய ஸ்வப்நாதனம் திரைப்படம் சிறந்த மலையாளப் படத்துக்கான தேசிய விருதை வென்றது. இதேபோல் இவர் இயக்கத்தில் வெளியாகி கிளாசிக் ஹிட் அடித்த யவனிகா படத்துக்கு மாநில விருது கிடைத்தது. 

k g george

இவர் சினிமாவில் பணியாற்றிய நாற்பது வருடங்களில் 19 படங்களை இயக்கியுள்ளார். பழம்பெரும் இயக்குனர் கே.ஜி.ஜார்ஜின் மறைவு மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த இயக்குனர் கே.ஜி.ஜார்ஜின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... நயன்தாரா படத்தை பார்த்து ஷாக் ஆன சென்சார் அதிகாரிகள்... ஏ சான்றிதழ் வழங்கியதால் பரபரப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios