நயன்தாரா படத்தை பார்த்து ஷாக் ஆன சென்சார் அதிகாரிகள்... ஏ சான்றிதழ் வழங்கியதால் பரபரப்பு
திருமணத்துக்கு பின்னர் நடிகை நயன்தாரா நடித்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ஏ சான்றிதழ் வழங்கி இருப்பது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
nayanthara
தென்னிந்திய திரையுலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வந்த நயன்தாரா, தற்போது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளார். அண்மையில் ஷாருக்கான் ஜோடியாக இவர் நடித்த ஜவான் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அட்லீ இயக்கிய இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடி வசூலை நெருங்கி வருகிறது. ஜவான் படத்தின் வெற்றிமூலம் பான் இந்தியா ஸ்டார் ஆகவும் உருவெடுத்துள்ளார் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா.
shahrukh khan, Nayanthara
நடிகை நயன்தாராவுக்கு திருமணமான பின்னும் அவருக்கான மவுசு குறையவில்லை. இன்றளவும் கோலிவுட்டில் நம்பர் 1 நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தற்போது கைவசம் எக்கச்சக்கமான படங்களை வைத்துள்ளார். குறிப்பாக புது முகங்களுக்கு அதிகளவில் வாய்ப்பளித்து வருகிறார் நயன். யூடியூப் பிரபலம் டியூடு விக்கி இயக்கத்தில் மண்ணாங்கட்டி என்கிற படத்தில் நடித்து வரும் அவர், அடுத்ததாக ரத்னகுமார் இயக்கும் படத்திலும் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.
இதையும் படியுங்கள்... ஸ்வீட் புன்னகையோடு ஹாட் போஸ்... முதுகை முழுசா காட்டி கவர்ச்சியில் மிரட்டும் அதுல்யா ரவியின் கிக்கான போட்டோஸ்
Jayam Ravi, Nayanthara
இதுதவிர நயன்தாரா நடித்த இறைவன் என்கிற திரைப்படமும் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. என்றென்றும் புன்னகை, மனிதன் போன்ற படங்களை இயக்கிய அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். சைக்கோ திரில்லர் படமான இறைவன் வருகிற செப்டம்பர் 28-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. அண்மையில் வெளியான இப்படத்தின் டிரைலருக்கு வேறலெவல் வரவேற்பு கிடைத்தது.
Iraivan movie Nayanthara
இந்நிலையில், இறைவன் படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் அப்படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளனர். இதனால் இறைவன் படத்தை குழந்தைகள் பார்க்க முடியாது. நயன்தாரா நடித்த படத்துக்கு ஏ சான்றிதழா என நெட்டிசன்கள் ஷாக் ஆகி உள்ளனர். இந்த படத்தில் அப்படி என்னதான் இருக்கு என சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது சைக்கோ கதையம்சம் கொண்ட படம் என்பதால், இதில் கொடூரமான ஆக்ஷன் காட்சிகள் உள்ளன. அதன் காரணமாகவே ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. மற்றபடி ஆபாச காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக திரையிடப்பட்ட ஜெயிலர் படம்.. திடீரென தியேட்டருக்குள் சிங்கநடை போட்டு வந்த ரஜினி