பிரபல காமெடி நடிகர், கல்லீரல் பிரச்சனை காரணமாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது திடீர் என அவர் மரணமடைந்துள்ளார்.

இதுவரை 250 திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட, மேடை நாடகங்களில், நடித்து தன்னுடைய தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர், மூத்த மலையாள நடிகர் சசி கலிங்கா. 

59 வயதாகும் இவருக்கு சமீப காலமாக கல்லீரலில் பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக, இவருடைய குடும்பத்தினர் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இவரை அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். 

மேலும் செய்திகள்: ஏமாற வேண்டாம்... ரசிகர்களுக்காக 'மாஸ்டர்' பட இயக்குனர் வெளியிட்ட முக்கிய தகவல்!
 

இந்நிலையில் இவர் சிகிச்சை பலன் இன்றி, இன்று... ஏப்ரல் 7 ஆம் தேதி காலை காலமானதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவரின் திடீர் மரணம் குறித்து கேள்விப்பட்ட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் தொடர்ந்து தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

1998 ஆம் ஆண்டு தகரச்செந்தா என்ற படத்தில் அறிமுகமான இவர், தொடந்து பல மலையாள படங்களில் குணச்சித்திர வேடத்திலும் காமெடி வேடத்திலும் நடித்து பிரபலமானவர். இவர் நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு நகைச்சுவை படமான  'குட்டிமாமா' வெளியாகி வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.