அடுத்தடுத்து திரையுலகைச் சேர்ந்த தலைசிறந்த ஆளுமைகளை இழந்து வருவது ரசிகர்களிடையே மிகப்பெரிய சோகத்தை உருவாக்கியுள்ளது. இசையுலகின் முடிசூடா மன்னனாக வலம் வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பிரிவில் இருந்தே இன்னும் அவருடைய ரசிகர்கள் மீளாத நிலையில், மற்றொரு பிரிவு இசையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 

இதையும் படிங்க: காதலரை கரம் பிடித்த விஜய் டி.வி. சீரியல் நடிகை... குவியும் வாழ்த்துக்கள்...!

தேன் கிண்ணம் படத்தில் “தேன் கிண்ணம் தேன் கிண்ணம் பருவத்தில் பெண்ணொரு தேன் கிண்ணம்”, “உத்தரவின்றி உள்ளே வா” என 200க்கும் மேற்பட்ட படங்களில் 500க்கும் மேற்பட்ட சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியவர் பாடலாசிரியர் குமார தேவன். பொள்ளாச்சி அருகே வடுகபாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த குமார தேவனுக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க:  பூக்களால் ஆன மேலாடையில்... டாப் ஆங்கிள் போஸ் கொடுத்து தவிக்க விட்ட யாஷிகா... அதிரடி ஹாட் கிளிக்ஸ்...!

இதையடுத்து அவருடைய குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். அப்படி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 88 வயதான குமார தேவன் மரணமடைந்தார். குமார தேவனின் மரணத்தால் அவரின் மனைவி லட்சுமி, மகள்கள் விஜய வெங்கடேஸ்வரி, சுபத்ரா தேவி ஆகியோர் துயரத்தில் மூழ்கியுள்ளனர்.அவருடைய மறைவிற்கு இசையுலகினரும், திரையுலகினரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.