ஐந்து நிமிடத்திற்கு மேல ஒரு இடத்தில் உட்கார மாட்டார் - பாவா செல்லத்துரை பற்றிய சீக்ரெட் சொன்ன ரேகா நாயர்!

ஜெயம் ரவியின் பூலோகம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நடிகராக அறிமுகமாகி இன்று ஒரு சிறந்த குணச்சித்திர நடிகராக மாறி உள்ளவர்தான் பாவா செல்லதுரை. இவர் பல புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Famous Kollywood actress rekha nair shares secret about actor and writer bava chelladurai ans

புத்தக வாசிப்பின் மீது கொண்ட ஆர்வத்தினால் சிறு வயது முதலிலேயே பல புத்தகங்களை படிக்க துவங்கிய பாபா செல்லதுரை அவர்கள் திருவண்ணாமலையில் வசித்து வந்த பொழுது, தன்னுடைய நண்பர்கள் சிலருடன் ஒன்றிணைத்து புத்தக வாசிப்பு குழு ஒன்றை ஆரம்பித்தார். இப்போது சுமார் 500 பேர் கொண்ட இந்த குழு, ஒரு பிரபலமான புத்தக வாசிப்பு குழுவாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

61 வயது நிரம்பியுள்ள பாவா செல்லதுரை அவர்கள், "எல்லா நாளும் கார்த்திகை", டொமினிக் உள்ளிட்ட ஏழு புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயம் ரவியின் பூலோகம், குரு சோமசுந்தரத்தின் ஜோக்கர், மக்கள் செல்வனின் சீதக்காதி, மம்மூட்டியின் பேரன்பு உள்ளிட்ட பல நல்ல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லால் சலாம்.. ரிலீஸ் உரிமையை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம் - முழு விவரம்!

அண்மையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக இவர் களமிறங்கிய நிலையில், நிகழ்ச்சி துவங்கிய 10 நாளுக்குள்ளாக பிக் பாஸ் வீட்டில் இருந்து இவர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு பேட்டி அளித்த பிரபல நடிகை ரேகா நாயர் அவர்கள், பாவா செல்லதுரை குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

Rekha Nair 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

"பாவா பரபரப்பாக இயங்கக்கூடிய மனிதர், அவரால் 5 நிமிடத்திற்கு மேல் ஓரிடத்தில் அமர்ந்து பேச முடியாது. ஒருவேளை பிரதமரோடு அமர்ந்து பேசுவதற்கான வாய்ப்பு செல்லதுரைக்கு கிடைத்தாலும் கூட, அவரால் பிரதமருடன் 5 நிமிடங்களுக்கு மேல் அமர்ந்து பேச முடியாது. நான் அவரை பல பெரிய மனிதர்களோடு அமைந்து பேசுவதை கண்டிருக்கிறேன், எங்கு சென்றாலும் ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஒரு இடத்தில் உட்கார மாட்டார்". 

"பரபரப்பாகவே இயங்கும் ஒரு மனிதர் அவர், பிக் பாஸ் வீட்டுக்குள் அவர் நூறு நாட்கள் தங்கப் போகிறார் என்று தனக்கு தெரியவில்லை என்று அவர் கூறியிருந்தார்". ரேகா நாயர் பேட்டியில் இந்த விஷயத்தை பேசிய வெகு சில நாட்களில் பாபா செல்லதுரை அவர்கள் பிக் பாஸ் வீட்டிலிருந்து தானாக முன்வந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

அச்சச்சோ.. ஐஷு கெளதம் வச்சது பொறியினு தெரியாம மாட்டிக்கிட்டியே? 'ஆஹா கல்யாணம்' சீரியலின் லேட்டஸ்ட் அப்டேட்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios