famous heroines reject aruvi movie
இயக்குனர் அருண் பிரபு இயக்கத்தில் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று அனைத்து திரையரங்கங்களிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் அருவி. இந்த படத்தை ட்ரீம் வாரியஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு மற்று எஸ்.ஆர்.பிரபாகரன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
இந்த படத்தில் கதாநாயகியாக அதிதி பாலன் அறிமுகமாகியுள்ளார். முதல் படத்திலேயே தன்னுடைய நடிப்பால் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இந்த படம் முழுக்க முழுக்க கதாநாயகியை மையப்படுத்து எடுக்கப்பட்டுள்ளதால், இந்த படத்தில் நடிக்க வைக்க முதலில் முன்னணி கதாநாயகிகள் சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் படக்குழுவினர் ஆனால் ஒரு சில காரணங்களால் அவர்களால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை.
தற்போது இந்த படத்திற்காக பேச்சுவார்தை நடத்தப்பட்ட நடிகைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அருவி படத்தில் நடிப்பதற்காக நடிகை சமந்தா, அனுஷ்கா, நயன்தாரா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றதாம் ஆனால் அவர்களால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை.

எனவே படத்தின் இயக்குனர் அருண் பிரபு இந்த படத்தில் புது முக நடிகையை அறிமுகம் செய்ய வேண்டும் என எண்ணி, கிட்ட தட்ட 500 க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆடிஷன் செய்து பின்பு தான் அதிதியை இந்த படத்தில் நடிக்க வைக்க கமிட் செய்தாராம்.
