famous director revels the income of controversial factory
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தில் 13 அப்பாவி மக்கள் சுட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர்.
ஜனநாயக நாட்டில் மக்கள் உயிருக்கே பாதுகாப்பு இல்லையா என ஒரு பாதுகாப்பற்ற சூழல் நிலவும் இந்த நேரத்தில் திரைத்துறை பிரபலங்கள் பலரும் இச்சம்பவம் குறித்து தங்கள் கண்டனத்தையும் கருத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.
சமீபத்தில் தனது கருத்தை தெரிவித்திருந்த இயக்குனர் ராம் தூத்துக்குடியில் நடைபெற்ற இந்த அநியாயத்திற்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
மேலும் ஸ்டெர்லைட் குஜாராத்தை சேர்ந்த ஒரு முதலாளியின் நிறுவனம்.இதற்கு மத்திய அரசு பாதுகாப்பாக இருக்கிறது.இந்த நிறுவனத்தின் மூலம் அதன் உரிமையாளருக்கு ஆண்டு தோறும் லாபம் மட்டும்78 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கிறது என தெரிவித்திருக்கிறார்.
