famous director refused this actor to participate in his movie

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து பா.ரஞ்சித் இயக்கும் இரண்டாவது திரைப்படம் காலா. இத்திரைப்படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார். காலா திரைப்படம் வரும் ஜீன் 7 அன்று திரைக்கு வர இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் ஒரு பக்கம் மும்முரமாக போய்க்கொண்டிருக்கிறது.

காலா படத்தின் தொடக்கம் முதல் இப்போது வரை நடந்து வரும் சில சுவாரஸ்யமான சம்பவங்களை ரஜினி, தனுஷ் மற்றும் ரஞ்சித் ஆகியோர் அவ்வப்போது ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளுவர். அப்படி ஒரு சம்பவத்தை தான் சமீபத்தில் கூறியிருக்கிறார் தனுஷ்.

காலா படத்தை தயாரித்திருக்கும் தனுஷிற்கு, அப்படத்தில் ஏதாவது ஒரு ரோலில் தானும் நடிக்க வேண்டும் என ஆசை இருந்ததாம். இதை ரஞ்சித்திடம் தெரிவித்த போது, தனுஷிடம் இந்த படத்திற்கு தயாரிப்பு செய்தால் மட்டும் போதும் என கூறியிருக்கிறார் ரஞ்சித். இயக்குனர் கூறினால் காரணம் இருக்கும் எனக்கருதி, தனுஷும் தனது ஆசையை ஒத்திவைத்து விட்டாராம். தனுஷின் இந்த ஆசை ரஜினியின் அடுத்த படத்தில் நிறைவேறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.