2020ம் ஆண்டு திரையுலகினருக்கு மிகப்பெரிய சோதனையான வருடமாகவே அமைந்துள்ளது. கொரோனா பெருந்தொற்றால் கணிக்க முடியாத அளவிற்கு பொருளாதார ரீதியாக முடங்கியது. அதுமட்டுமின்றி கொரோனா தொற்று பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தில் இருந்து பல திறமையான கலைஞர்களையும் இழந்து வருகிறோம். சமீபத்தில் சின்னத்திரை இயக்குநர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

பிரபல வங்காள மொழி சின்னத்திரை இயக்குனர் தேபிதாஸ் பட்டாச்சார்யா. வங்க மொழியில் பல புதுமுக நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தி உள்ளார். பிரித்தாஷ்ரம் என்ற சின்னத்திரை நிகழ்ச்சியின் அடுத்த சீசனை இயக்கி வந்த நிலையில், கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார். 


கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விரைவில் நலம்பெற்று திரும்பி வருவார் என அனைவரும் காத்திருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.