இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடித்த 'அசுரன்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து கலக்கி இருந்தவர் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர். 

இவர், பிரபல மலையாள இயக்குனரும், தயாரிப்பாளருமான ஸ்ரீகுமார் மேனன் என்பவர் மீது, திருவனந்தபுரம் போலீசாரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். 

அந்த புகாரில், இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன், தன்னுடைய பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் செயல்படுவதாகவும், அவரால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் கூறியிருந்தார்.

நடிகை மஞ்சு வாரியரின் புகார் மனுவை விசாரணை செய்த திருவனந்தபுரம் போலீசார், இயக்குனர் ஸ்ரீகுமாரை அதிரடியாக கைது செய்தனர். பின் விசாரணை நேரத்தில் ஒத்துழைப்பு தர வேண்டும் என்கிற நிபந்தனையோடு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம், மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.