Asianet News TamilAsianet News Tamil

மாரடைப்பால் பிரபல இயக்குனர் திடீர் மரணம்..! முன்னணி நடிகர்கள் இரங்கல்..!

பிரபல மலையாள திரைக்கதை எழுத்தாளரும், இயக்குநருமான, டென்னிஸ் ஜோசப் நேற்று இரவு, மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது மறைவிற்கு மலையாள திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
 

famous director and script writer death for heart attackc
Author
Chennai, First Published May 11, 2021, 1:55 PM IST

பிரபல மலையாள திரைக்கதை எழுத்தாளரும், இயக்குநருமான, டென்னிஸ் ஜோசப் நேற்று இரவு, மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது மறைவிற்கு மலையாள திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: இந்தியன் 2 படத்தின் தாமதத்துக்கு லைகா நிறுவனமே காரணம் - உண்மையை உடைத்த இயக்குனர் ஷங்கர்!
 

64 வயதான டென்னிஸ் ஜோசப், திடீர் மாரடைப்பு ஏற்பட்டு,  கோட்டையத்தில் உள்ள அவரது வீட்டில் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை,  அருகாமையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் அனுமதித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

famous director and script writer death for heart attackc

டென்னிஸ் ஜோசப் மலையாள சினிமாவில் மிகவும் வெற்றிகரமான திரைக்கதை எழுத்தாளர்களில் ஒருவராகவும், 1980 களில் இருந்து, மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் போன்ற நட்சத்திரங்களுடன் பணியாற்றியுள்ளார்.

மேலும் செய்திகள்: இவங்களுக்கு திருமணம் ஆகிடுச்சா? கர்ப்பமாக இருப்பதாக 'ரோஜா' சீரியல் நடிகை வெளியிட்ட தகவல்..!
 

famous director and script writer death for heart attackc

மோகன்லாலின் பிளாக்பஸ்டர் ராஜவிந்தே மாகன் மற்றும் மம்முட்டியின் நிரகூட்டு மற்றும் புதுதில்லி ஆகியவற்றில் திரைக்கதை எழுத்தாளராக இருந்துள்ளார். அவரது ஸ்கிரிப்ட்கள் திரைத்துறையில் ஒரு புதிய வகை திரைப்படங்கள் எடுக்க வழி வகுத்தன. டென்னிஸ் ஜோசப்பிற்கு இரங்கல் செய்தியை அறிந்த மோகன்லால் மற்றும் மம்முட்டி ஆகியோர் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்: கோலிவுட் திரையுலகை சுழட்டி அடிக்கு கொரோனா! சூர்யா - தனுஷ் பட தயாரிப்பாளர் மரணம்!
 

famous director and script writer death for heart attackc

நடிகை சில்க் சுமிதாவை ஒரு கிராமிய தமிழ்ப் பெண்ணாக நடிக்க வைத்தவர்.  மேலும், மனு அங்கிள் படத்துக்காக தேசிய விருது பெற்றவர். 40.க்கும் மேற்பட்ட மலையாள சூப்பர் ஹிட் படங்களின் கதாசிரியர். கதைக்காக அதிக சன்மானம் பெற்ற கதாசிரியர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. சில வருடங்களுக்கு முன்பு மலையாள சினிமா குறித்த தகவலுக்காக அவரிடம் பேசியபோது "சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சினிமாவாக எடுக்க உள்ளதாகவும்" கூறி இருந்தார். ஆனால் அவரது அந்த ஆசை நிறைவேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios