Asianet News TamilAsianet News Tamil

பிரபல நகைச்சுவை நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தற்போது மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகராக வலம் வரும் பக்ருவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

famous comedian pakru tested covid 19 positive
Author
Chennai, First Published Mar 27, 2021, 10:51 AM IST

மார்ச் மாதம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, கடந்த சில மாதங்களாக சற்று தணிந்திருந்த நிலையில் மீண்டும் மிகவும் வேகமாக பரவி வருகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் முக கவசம் மற்றும் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதால் கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும் என சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், மற்றும் சுகாதார துறை அதிகாரிகளும் வலியுறுத்தி வருகிறார்கள்.

famous comedian pakru tested covid 19 positive

மேலும் ஷூட்டிங் மற்றும் பிற பணிகளுக்காக வெளியில் செல்வதாலும் பிரபல பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி  வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் சூர்யா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் பூரண குணம் அடைந்தது அனைவரும் அறிந்தது தான். சமீபத்தில் பாலிவுட்டின் டாப் நடிகரான அமீர்கான், மாதவன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

famous comedian pakru tested covid 19 positive

தற்போது மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகராக வலம் வரும் பக்ருவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜூவாவுடன் டிஷ்யூம், சூர்யாவுடன் ஏழாம் அறிவு உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் பக்ரு. கேரளாவில் தன்னுடைய வீட்டில் வசித்து வந்த பக்ருவுக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டதை அடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

famous comedian pakru tested covid 19 positive

இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பக்ரு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன், உடல் நலம் தேறி வருகிறேன்,. விரைவில் குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பி படங்களில் நடிப்பேன். அனைவரும் எச்சரிக்கையாக இருங்கள். கட்டாயம் முகக்கவசம் அணியுங்கள். விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios