பிரபல நடிகை உட்பட அவருடைய குடும்பத்தில் உள்ள மூன்று பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதை, அவரே தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவை சேர்ந்த பெங்காலி நடிகை, கோயல் மாலிக் மற்றும் இவருடைய பெற்றோர், மற்றும் கணவர் ஆகிய நான்கு பேர் தான் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகை கோயல் கூறியுள்ளார்.

அவர் தனது தாயார் தீபா மல்லிக்,  தந்தை மற்றும் பிரபல பெங்காலி நடிகர் ரஞ்சித் மல்லிக் மற்றும் கணவரும் தயாரிப்பாளருமான நிஸ்பால் சிங் ஆகியோருடன் வசித்து வருகிறார் கோயல். இவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவருமே தற்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டு தங்களை தாங்களே, தனிமை படுத்திக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.  

இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள நடிகை கோயல் மாலிக், வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்ததாக கோயல் ட்விட்டரில் ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளார். கடந்த இரண்டு வாரங்களாக, வறட்டு இரும்பல் மற்றும் மூச்சி திணறல் பிரச்சனை தன்னுடைய பெற்றோருக்கு இருந்ததாலும், இது கொரோனா வைரஸ் பிரச்சனையின் அறிகுறி என்பதால் அனைவர்க்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நான்வருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் இவர்கள் அவரவர் வீட்டிலேயே தனிமை படுத்தப்பட்டுள்ளனர். 

மேலும் கொல்கத்தா காவல் துறை மற்றும் சுகாதார துறை, இவர்களுக்கு தேவையான அணைத்து உதவிகளையும் செய்வதோடு, இவர்களின் உடல் நிலையை பரிசோதித்து வருகிறார்கள்.