அதைத்தொடர்ந்து கடந்த 2012ஆம் ஆண்டில் அலெக் பால்ட்வின் யோகா பயிற்சியாளரான ஹிலாரியா 38 என்பவரை திருமணம் செய்தார். இத் தம்பதியருக்கு இதுவரை 6 குழந்தைகள் பிறந்துள்ளன. கடைசியாக பிறந்த ஆறாவது குழந்தை மரியா வாடகை தாய் முறையில் தம்பதியினர் பெற்றெடுத்தனர். இந்நிலையில் ஹிலாரியா மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார்.

பிரபல அமெரிக்க நடிகர் அலெக் பால்ட்வின் ஹிலாரியா தம்பதியருக்கு ஏழாவது குழந்தை பிறக்க உள்ளது. இதற்கான தகவலை ஹிலாரியா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது அவர்களது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் பலரும் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான அலெக் பால்ட்விட் 63, நடிகை கிம் பசிங்கரை கடந்த 1993 ஆம் ஆண்டு திருமணம் செய்தார் அவர்களுக்கு அயர்லேண்ட் எலிசி பால்ட்வின் (23) என்ற ஒரு மகள் உள்ளார். இத் தம்பதியருக்கு கடந்த 2002ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்தானது. 

அதைத்தொடர்ந்து கடந்த 2012ஆம் ஆண்டில் அலெக் பால்ட்வின் யோகா பயிற்சியாளரான ஹிலாரியா 38 என்பவரை திருமணம் செய்தார். இத் தம்பதியருக்கு இதுவரை 6 குழந்தைகள் பிறந்துள்ளன. கடைசியாக பிறந்த ஆறாவது குழந்தை மரியா வாடகை தாய் முறையில் தம்பதியினர் பெற்றெடுத்தனர். இந்நிலையில் ஹிலாரியா மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த தகவலை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தங்களது குடும்பம் குழந்தைகளுடன் உள்ள வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:- கடந்த சில ஆண்டுகளாக பல ஏற்ற இறக்கங்களுக்கு பிறகு இப்போது எங்கள் வாழ்வில் ஒரு அற்புதமான எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. இது மிகப் பெரிய ஆச்சரியம்.

இந்த இலையுதிர் காலத்தில் மற்றொரு பால்ட்வின் வர இருக்கிறது. எங்கள் குடும்பம் முழுமை அடைந்தது என்று நாங்கள் உறுதியாக இருந்தோம், ஆனால் அதையும் மீறி எங்களுக்கு ஒரு ஆச்சரியம் மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. நான் குழந்தைகளுடன் இருக்கும் தருணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எங்கள் குழந்தைகள் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்கள். இப்போது எங்கள் வாழ்வில் ஒரு புதிய குழந்தை வர இருக்கிறது. இது எங்களின் வாழ்வில் பிரகாசமான தருணம். இதுபோன்ற நிச்சயமற்ற காலங்களில் எங்களுக்கு இது கிடைத்திருப்பது ஒரு ஆசீர்வாதம், பரிசு . கடந்த சில மாதங்களாக உங்களுடன் நான் தொடர்பில் இல்லாதிருந்தேன். உங்களை அதிகம் நான் தவற விட்டேன். இந்த மகிழ்ச்சியான தருணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.