உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று திரையுலகினரையும் நிம்மதியாக விடவில்லை. அமிதாப் பச்சன், இயக்குநர் ராஜமெளலி, அர்ஜூன் கபூர், மலைகா அரோரா, தமன்னா, நிக்கி கல்ராணி, விஷால், மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் தம்பி துருவ் சார்ஜா, ஐஸ்வர்யா அர்ஜூன், டாக்டர் ராஜசேகர், நடிகை சார்மியின் பெற்றோர் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இந்நிலையில் ஷூட்டிங்கில் பங்கேற்ற பிரபல நடிகைக்கு மற்றொருவர் மூலமாக கொரோனா தொற்று ஏற்பட்ட சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.  2011ம் ஆண்டு தமிழில் வெளியான கண்டேன் படம் மூலமாக அறிமுகமானவர் ராஷ்மி கெளதம். அந்த படத்தில் சாந்தனு ஜோடியாக அவர் நடித்திருப்பார். அதற்கு பிறகு ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ளார் அவர். தற்போது தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வரும் ராஷ்மிகா, ஜபர்தஷ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

 

இதையும் படிங்க: பாண்டியன் ஸ்டோர் சித்ராவை அலேக்காக தூக்கிய வருங்கால கணவர்... விஜய் டி.வி. கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்போட்டோஸ்!

அந்த நிகழ்ச்சியில் பணியாற்றி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருடன் பணியாற்றிய ராஷ்மியும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை மேற்கொண்டு வருவதாக ராஷ்மி தெரிவித்துள்ளார். அவர் விரைவில் பூரண நலம் பெறவேண்டுமென ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.