'கத்திச்சண்டை' படத்தை அடுத்து விஷால் தற்போது நடித்து வரும் 'துப்பறிவாளன்' படத்தை இயக்குனர் மிஷ்கின் கடந்த மாதம் படப்பிடிப்பை தொடங்கி விறுவிறுப்பாக இயக்கி வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படத்தில் அக்சராஹாசன், பிரசன்னா, வினய், மற்றும் கே.பாக்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராகுல்ப்ரித்திசிங் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் தரப்பில் உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது இதில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே அவர் மகேஷ்பாபு-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம் உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்து வருவதால் அவரால் இந்த 'துப்பறிவாளன்' படத்திற்கு தேவையான கால்ஷீட்டை ஒதுக்க முடியவில்லை என்பதால் அவர் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ராகுல் ப்ரித்திசிங்கிற்கு பதிலாக பிரபல மலையாள நடிகை அனு இம்மானுவேல் இந்த படத்தின் நாயகியாக நடிப்பார் என்றும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.