கன்னட திரையுலகில் பகீர் கிளப்பியுள்ள போதைப்பொருள் விவகாரத்தில்,  மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் சின்னத்திரையைச் சேர்ந்த நடிகை அனிகா, ரவீந்திரன், அனூப் ஆகியோர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டனர். இதையடுத்து கன்னட சினிமாவின் பிரபல நடிகையான ராகினி திவேதிக்கும் இந்த கும்பலுடன் தொடர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் தமிழில் ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில் படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார். 

 

இதையும் படிங்க: நைட்டியில் கூட நயன்தாரா இவ்வளவு அழகா?... விக்னேஷ் சிவன் வெளியிட்ட போட்டோவை பார்த்து விக்கி நிற்கும் ரசிகர்கள்!

இந்நிலையில் கடந்த 4ம் தேதி பெங்களூரில் உள்ள ராகினி வீட்டில் மத்தியக்குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனையில் இறங்கினர். அதன் பின்னர் கைது செய்யப்பட்ட ராகினி பெங்களூருவில் உள்ள ​மகளிர் கைதிகள் காப்பகத்தில் அடைக்கப்பட்டார். ராகினி போலீசாரின் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்காததை அடுத்து அவருடைய காவல் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய சஞ்சனா கல்ராணி உள்ளிட்ட 9 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

இதையும் படிங்க: கொசுவலை போன்ற மெல்லிய புடவையில் அனிகா... தேவதையாய் ஜொலிக்கும் வைரல் போட்டோஸ்...!

இவர்களின் காவல் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்ததை அடுத்து, பெங்களூரு முதலாவது கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகினி திரிவேதி உள்ளிட்ட 8 பேரை ஆஜர்படுத்தினர். காணொலி காட்சி மூலம் நடைபெற்ற விசாரணையில், ராகினியை மீண்டும் காவலில் எடுக்க போலீசார் அனுமதி கோரினர். இதையடுத்து ராகினியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது.