லலிதாவின் மறைவு மலையாள திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. லலிதாவின் மறைவுக்கு கேரள முதல்வா் பினராயி விஜயன், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனா்.
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் 550 படங்களுக்கு மேல் நடித்து பிரபலமான நடிகை லலிதா (Lalitha) உடல்நலக்குறைவால் காலமானார். இவருக்கு வயது 74. நாடகங்களில் நடித்து வந்த இவர், கடந்த 1969-ம் ஆண்டு கே.எஸ்.சேதுமாதவன் இயக்கத்தில் வெளியான ‘கூட்டுக் குடும்பம்’ என்கிற திரைப்படம் மூலமாக சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
அடுத்தாண்டே நடிப்புக்கு முழுக்கு போட்டு சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்த இவா், 1983-இல் தனது கணவரும் இயக்குனருமான பரதனின் (Bharathan) ‘காற்றத்தே கிளிக்கூடு’ என்கிற படம் மூலம் மீண்டும் நடிக்கத் தொடங்கினாா். இவர் மலையாளத்தை போல் தமிழிலும் ராஜபாா்வை, காதலுக்கு மரியாதை, அலைபாயுதே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளாா்.

கேரளாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கலைப் பிரிவாக கடந்த 1950-களில் தொடங்கப்பட்ட கேரள பீப்புள்ஸ் ஆா்ட்ஸ் கிளப் (KPAC) என்பதன் மூலம் பிரசார நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய லலிதா, அந்தக் குழுவின் பல பிரபல நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளாா். அதன் காரணமாக இவர் கேபிஏசி லலிதா என்றே அழைக்கப்பட்டார். இவரது கணவர் பரதன் தமிழில் தேவர்மகன், ஆவாரம்பூ போன்ற படங்களை இயக்கி உள்ளார்.

கணவர் பரதன் மறைந்த பிறகு கொச்சி அருகில் உள்ள திருப்பூணித்துறையில் உள்ள தனது இல்லத்தில் மகன் சித்தாா்த், மகள் ஸ்ரீகுட்டி ஆகியோருடன் வசித்து வந்தாா். உடல்நலக் குறைவு காரணமாக பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நடிகை லலிதா (Lalitha) நேற்று இரவு உயிரிழந்தார்.
லலிதாவின் மறைவு மலையாள திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. லலிதாவின் மறைவுக்கு கேரள முதல்வா் பினராயி விஜயன், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனா்.
இதையும் படியுங்கள்.... Valimai ticket :அட்ராசக்க இந்த ஆஃபர் நல்லா இருக்கே! மளிகை பொருள் வாங்குனா ‘வலிமை’ டிக்கெட் இலவசமாம்- இது எங்க?
