நடிகர், நடிகைகள், அரசியலுக்கு வருகை தருவது புதிதில்லை  என்றாலும், இளம் வயதில் ஒரு நடிகை பிரபல அரசியல் கட்சியால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வருவது அரிது தான். 

அந்த வகையில் காமெடி நடிகர், தம்பி ராமைய்யாவின் மகன், உமாபதி நடித்த 'அதாகப்பட்டது மகாஜனங்களே' படத்தில் நடித்த நடிகை ரேஷ்மா ரத்தோர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். இவர் தமிழில் ஒரே ஒரு படத்தில் நடித்திருந்தாலும் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார்.

இளம் நடிகையாக இருக்கும் போதே...  நடித்துக் கொண்டே தீவிர அரசியலில் இறங்கியுள்ள ரேஷ்மா ரத்தோர், தெலுங்கானா சட்டசபை தேர்தலின்போது, எம்.எல்.ஏ.வுக்கு போட்டியிடயிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.