சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் ஒருபுறம் அரசியல் பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வந்தாலும் மறுபுறம் புதிய பட வேலைகளிலும் ஆர்வாம் காட்டுகிறார்கள்.

அந்த வகையில் ரஜினிகாந்த் தற்போது பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய இளம் இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அதே போல் கமல் இந்தியன் 2 படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

படபிடிப்பு:

ரஜினிகாந்தின் படத்திற்கு இன்னும் பெயர் வைக்க வில்லை என்றாலும், இந்த படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படம் குறித்து பேசியுள்ள இயக்குனர் கார்த்தி சுப்புராஜ். இது அதிரடி படமாக இருக்கும் என்றும், கண்டிப்பாக அரசியல் விஷயங்கள் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

பேராசிரியராக ரஜினி:

இந்த படத்தில் ரஜினி பேராசிரியர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் இமயமலை, இந்தியா - பாகிஸ்தான் எல்லை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடப்பதால் பயங்கரவாதிகள் சம்பந்தப்பட்ட கதையாக இருக்கலாம் என்றும் ஒரு பேச்சு அடிப்பட்டு வருகிறாது.

மேலும் இந்த படத்தில் கார்த்தி சுப்புராஜின் ஆஸ்தான நடிகர்கள் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

போட்டி போடும் நடிகைகள்:

இது வரை இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எந்த நடிகை நடிக்கிறார் என்று உறுதி செய்யப்படவில்லை. இதனால் எப்படியும் ரஜினியுடன் ஜோடி சேரும் வாய்ப்பை பெற வேண்டும் என்று திரிஷா, அனுஷ்கா, காஜல் அகர்வால், நயன்தாரா, ஹன்சிகா, உள்ளிட்ட முன்னணி நடிகைகளிடையே கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது. 

கமலுக்கு போட்டி:

ஏற்கனவே கடந்த 1996-ம் ஆண்டு வெளியான இந்தியன் படம் வெற்றி பெற்ற நிலையில், தற்போது கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலைவி வருகிறது.

இதனால் இந்தியன் 2 படத்தில் கமலுடன் எப்படியாவது ஜோடி போட வேண்டும் என்றும் சில முன்னணி நடிகர்கள் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.