கவன குறைவால், மாடியில் இருந்து கீழே விழுந்த பிரபல நடிகை மரணமடைந்துள்ள சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக எதிர்பாராத, நேரத்தில் நடிக்கும் விபத்துக்களில், திடீர் என ஒருவர் உயிர் இழந்தால் எளிதில் அதை குடும்ப உறுப்பினர்களால் மட்டும் அல்ல மற்றவர்களால் கூட ஏற்று கொள்ள முடியாது. இப்படி இரப்பவர் ஒரு பிரபலமாக இருந்தால், ரசிகர்கள் அவ்வளவு எளிதில் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அப்படி ஒரு சம்பவம் தான் அரங்கேறி உள்ளது பிரபல நடிகைக்கு. ஓடியா தொலைக்காட்சியில் பல சீரியல்களிலும், ‘சோரி சோரி மனா சோரி’ ,'ஸ்மைல் ப்ளீஸ்,  போன்ற ஓடிய மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை லட்சுமி பிரியா என்கிற நிகிதா. 

இவர் கடந்த சில வாரங்களுக்கு முன், தன்னுடைய ஆறு மாத குழந்தையுடன்  பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மாடியில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த இவர், தடுப்பு சுவர் சிறிதாக இருப்பதை கவனிக்காமல், கால் இடறி கண் இமைக்கும் நேரத்தில் மாடியில் இருந்து கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு மண்டையில் பலமான அடி பட்டு, ரத்த வெள்ளத்தில் துடித்தித்துக்கொண்ட இவரை உடனடியாக, இவருடைய பெற்றோர்... பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலன் இல்லாமல் இறந்தார். இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியிலும், பிரபலங்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலர் தொடர்ந்து நடிகை நிகிதாவிற்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.