சீனாவில் ஆரம்பித்த கொரோனா தற்போது உலகம் முழுவதும் 203 நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. மக்கள் அனைவரும் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வாருங்கள் என மத்திய, மாநில அரசுகள் கோரிக்கை விடுத்தாலும் மக்கள் எதையும் காதில் வாங்குவதாக தெரியவில்லை. 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஏழை, பணக்காரன் என்ற எவ்வித பாகுபாடும் இன்றி சகலரையும் வாட்டி வதைக்கிறது. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்ஸ் மற்றும் அவரது மனைவி, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட ஏராளமானோர் கொரோனாவின் கோர பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். 

இந்நிலையில், பிரபல நடிகைக்கு தனக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக புகைப்படத்துடன் உருக்கமாக வெளியிட்ட பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.  ஹாலிவுட்டை சேர்ந்த புகழ்பெற்ற நடிகையான ஆலி வென்ட்ஒர்த் தற்போது கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,  "எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. எனக்கு எவ்வித அறிகுறியும் இல்லை. ஆனால் இப்போது, அதிக காய்ச்சல், கடுமையான உடல் வலி  மற்றும்  ஒரு வித அழுத்தத்தை உணர்கிறேன். எனது குடும்பத்தினரிடம்  இருந்து விலகி இருக்கிறேன். என்னால் முடிய வில்லை" என்று உருக்கமாக கூறியுள்ளார். நடிகையின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதலும், தைரியமும் கூறி வருகின்றனர்.