famous actors latest interview about his political entry

எப்போது அரசியலுக்கு வருவீர்கள்? என ரஜினியிடமும், கமலிடமும் இத்தனை ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு, இப்போது தான் பதில் கிடைத்திருக்கிறது. இதே கேள்வியை தற்போது அதிகம் எதிர்கொள்ளும் நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.

இவர் தற்போது ”தளபதி 62” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்திருக்கும் இத்திரைப்படத்தில், சமீபத்திய அரசியல் காட்சிகள் சில இடம்பெற்றிருக்கின்றன. அந்த காட்சிகள் கூட இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் பற்றி தான் எடுக்கப்பட்டு இருக்கின்றன, என்றெல்லாம் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

தளபதி62 திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, ரசிகர்கள் விஜயுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கமான செயலாகி இருக்கிறது. அப்படி புகைப்படம் எடுத்த போது விஜய்-ன் ரசிகர் ஒருவர், விஜயிடம் ”தலைவா நீங்க எப்போ அரசியலுக்கு வரப்போறீங்க?” என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அந்த கேள்விக்கு ” ஏன் அப்போ நான் நடித்தது போதுமா?” என எதிர் கேள்வி கேட்டிருக்கிறார் விஜய். இந்த கேள்வியை கேட்ட உடன் அதிர்ந்துவிட்டார் அந்த ரசிகர். அதன் பிறகு விஜய் தொடர்ந்து நடிக்க வேண்டும். அவரை திரையில் எங்களால் மிஸ் பண்ண முடியாது. என கூறி உருகி இருக்கிறார் அந்த ரசிகர்.